நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மண்சரிவினால் வீதிகள் தடைப்பட்டுள்ளமையினால் தமக்கு நியமிக்கப்பட்ட நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள் சுற்றுப்புறப் பகுதிகளில் பண்டாரவளை மற்றும் பதுளையில் உள்ள உயர்தரப் பரீட்சை நிலையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
மண்சரிவு காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஹாலிஎல – உடுவர 7ஆம் கட்டை பகுதியில் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
இதனிடையே, மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் பொலன்னறுவை – மட்டக்களப்பு மார்க்கத்தின் மனம்பிட்டிய – கல்லேல்ல இடையிலான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.