‘அயலக தமிழர் தின விழா’வில் குவிந்த 58 நாட்டு தமிழர்கள்: சென்னையில் இன்று உதயநிதி தொடங்கி வைக்கிறார்

Date:

தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சென்னையில் அயலக தமிழர் தின விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இந்த விழாவில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர் பங்கேற்கிறார்கள். இந்த அயலக தமிழர் தின விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், மந்திரிகள், கல்வியாளர்கள், கவிஞர்கள் பங்கேற்கின்றனர்.வெளிநாடுகளில் வாழும் 1,400-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க பதிவுசெய்து உள்ளனர்.

இதில், 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகியவற்றை சேர்ந்த வெளிநாடுவாழ் தமிழர்கள் பங்கேற்கிறார்கள்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்து பேசுகிறார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட அயலக தமிழர் கண்காட்சி அரங்குகளையும் திறந்துவைக்கிறார்.

மேலும், கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு அயலக தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவில், சிறப்பு நிகழ்ச்சிகளாக 4 கலந்துரையாடல்களும், ஒரு கவியரங்கமும் நடைபெறுகின்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) விழா பேருரை நிகழ்த்துவதுடன், ‘எனது கிராமம்’ என்ற முன்னோடி திட்டத்தையும் தொடங்கிவைக்கிறார்.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் சென்னை நோக்கி பயணமாகியுள்ளனர்.

மூன்றாவது தடவையாக முன்னெடுக்கப்படும் இவ்விழாவை தமிழக அரசானது, தமிழக எல்லையைத் தாண்டி, பரந்துபட்டு சர்வதேசங்களிலும் வசிக்கும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் வகையில் கொண்டாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...