மன்னார் மாவட்டத்தில் சடுதியாக குறைந்துள்ள கோழி இறைச்சியின் விலை!

Date:

மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சடுதியாக குறைத்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக மீன் மற்றும் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இறைச்சி கோழி மற்றும் முட்டை கோழி விலை குறைவடைந்துள்ளது.

குறிப்பாக ஒரு கிலோ இறைச்சி கோழி 1,360 ரூபாவாகவும் முட்டை கோழி  கிலோ 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இறைச்சி கோழிக்கான விற்பனை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படாத நிலையில் ஏனைய மாவட்டங்களில் 1,450-1,500 ரூபா வரையில் கோழி இறைச்சி விற்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...