அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க சுகாதாரத்துறை தொழிற்சங்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன.
இன்று (16) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோருடன் தமது கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய தொழிற்சங்க பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் நாளை (17) காலை 6.30 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.