சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி 2024: வழக்கமான புத்தகக் காட்சிக்கும், இதற்கும் என்ன வேறுபாடு?

Date:

சென்னையில் இரண்டாவது ஆண்டாக பன்னாட்டு புத்தகக் காட்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதில் என்ன சிறப்புகள் உள்ளன என்றும், வழக்கமான புத்தகக் காட்சியில் இருந்து பன்னாட்டு புத்தகக் காட்சி எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பது பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.

மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள சென்னை புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 19 வரை நடைபெறும்.இந்த நிலையில் சென்னையில் இரண்டாவது ஆண்டாக பன்னாட்டு புத்தகக் காட்சி தொடங்கி உள்ளது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக அரசின் பன்னாட்டு புத்தகக் காட்சி 16 ஆம் தேதி தொடங்கியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு புத்தகக் காட்சியில் 30 நாடுகள் வரை பங்கேற்றன. இதில் 120 நூல்களை வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தன. அவற்றில் 52 நூல்கள் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

காலை 10 முதல் மாலை 6 மணி வரை பன்னாட்டு புத்தகக் காட்சி நடைபெறும். மாலை 4 மணிக்கு மேல் பொதுமக்கள் அரங்குகளை பாா்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.இந்த ஆண்டு நடைபெறும் புத்தகக் காட்சியில், தொடக்க காலம் முதல் தற்போதைய செயற்கை நுண்ணறிவு வரை எழுத்துகள் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளன என்பது பற்றி மையப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

புத்தகக் காட்சியில் 80 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இறுதி நாளில் தமிழில் மொழிப்பெயா்க்கப்பட்ட 200 புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளது.

பன்னாட்டு புத்தகக் காட்சியில் 40 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. நமது நாட்டில் இருந்து 10 மாநிலங்களும் கலந்து கொண்டுள்ளன.

மலேசியா, கனடா, பிரிட்டன், இந்தோனேசியா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, பின்லாந்து, இத்தாலி, துருக்கி, சவுதி அரேபியா, கிரேக்கம், லெபனான், வடக்கு மாசிடோனியா, ஸ்லோவேனியா, லிதுவேனியா, லாத்வியா, செனகல், செர்பியா, பிரேசில், மயன்மார், அல்பேனியா, தான்சானியா, நியூசிலாந்து, ஆர்மீனியா, ஜார்ஜியா, போர்ச்சுக்கல், வங்கதேசம், தாய்லாந்து, வியட்நாம், போலந்து, பிலிப்பைன்ஸ், எகிப்து, ஈரான் ஆகிய நாடுகள் பங்கேற்று உள்ளன.

ஒரு நாடு அல்லது கலாச்சாரம் உலகளவில் வளர்ந்த நாடாக ஆவதற்கான அறிகுறிகளில் ஒன்றாக பன்னாட்டுப் புத்தகக் காட்சி திகழ்கிறது. பல்வேறு கலாச்சாரப் பின்னணியில் உள்ளவர்களுடன் உள்நாட்டுப் பதிப்பாளர்கள் தொடர்புகொள்ள வழிவகுப்பதால், இது இருதரப்புக்கும் உலகச் சந்தையைத் திறந்துவிடுகிறது.

புத்தகக் காட்சிகள் பல இலக்கியப் படைப்புகளின் பரிமாற்றத்தை எளிதாக்குகின்றன, உலகில் உள்ள பல்வேறு இலக்கிய மரபுகள், மொழிகளை ஆராய வாசகர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.சர்வதேசப் புத்தகக் காட்சியில் காட்சிப்படுத்துவது என்பது வெளியீட்டாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஒரு விளம்பரம் ஆகும். படைப்பாளர்களின் புதிய தலைப்புகளை உலகளவில் அறிமுகப்படுத்த இது ஒரு நல்ல தளத்தை வழங்குகிறது.

தமிழ் எழுத்தாளர்களை உலக அளவில் அறிமுகம் செய்யும் மேடையாக விளங்குகிறது.

சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், தமிழ்ப் படைப்பாளிகள் உலகெங்கும் சென்று சேரவும், உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வத்தைத் தமிழில் ஆக்கி அளிக்கவும், பெரும் பொருள்செலவில் நமது அரசு முன்னெடுக்கும் இந்த உலக அளவிலான அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...