அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு!

Date:

2024 வரவு-செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்கான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடந்த நவம்பர் மாத 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது அரச ஊழியர்களுக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதன்படி, அரச ஊழியர்களுக்கான மேலதிக 5 ஆயிரம் கொடுப்பனவு இம் மாதம் முதலும், மேலும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் எனவும், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு பின்னர் அது மேலும் 14 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பணம் அச்சிடுதல் மற்றும் கடன் வாங்குதல் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளதால், செலவினங்களைக் குறைத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதன் மூலம் மாத்திரமே இந்த மேலதிக நிதியைப் திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...