நாட்டில் மரக்கறிகளின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மரகறி வகைகளை கொள்வனவு செய்வதை குறைத்துள்ளனர்.
சந்தை நிலவரப்படி ஒரு கிலோ கரட்டின் மொத்த விற்பனை விலை 1200 ரூபாவரையும் சில்லறை விலை 1 ஆயிரத்து 500 ரூபாவரையும் செல்கிறது.
கொத்து ரொட்டி மற்றும் ரைஸ் உணவுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கரட் மற்றும் வெங்காய இலைகளின் அளவை ஹோட்டல் உரிமையாளர்கள் குறைத்துள்ளனர். அத்துடன், சில ஹோட்டல்களில் கரட் சேர்க்காமல் இவை தயாரிக்கப்படுகின்றன.
அதேபோன்று கொத்து ரொட்டி மற்றும் ரைஸ் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.