அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போகும் தலைவர்கள் யார்?

Date:

உத்தரபிரதேசத்தில் நாளை அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் உள்பட இந்த நிகழ்ச்சியில் நாளை இந்தியாவில் உள்ள பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர்.

வி.வி.ஐ.பி., வி.ஐ.பி என பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்களை வகைப்படுத்தி, அவர்கள் அமர்வதற்கான இடங்களும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியின் கூட்டணி கட்சித்தலைவர்கள் உள்பட பலரும் நிராகரிக்க உள்ளனர். இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவை எந்தெந்த அரசியல்வாதிகள் நிராகரித்துள்ளனர் என்பதை கீழே காணலாம்.

காங்கிரஸ்: மல்லிகார்ஜூன் கார்கே, சோனியா காந்தி, அதிர்ரஞ்சன் சௌத்ரி, மன்மோகன் சிங்

திரிணாமுல் காங்கிரஸ்: மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதலமைச்சர்)

ஆம் ஆத்மி கட்சி: அர்விந்த் கெஜ்ரிவால்

சிவசேனா : உத்தவ் தாக்கரே

தேசியவாத காங்கிரஸ்: சரத்பவார்

தேசிய மாநாடு கட்சி: ஃபரூக் அப்துல்லா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: சீதாராம் யெச்சூரி

மேலே கூறியவர்கள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டார்கள்.

முதலில், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கமாட்டார் என்று கூறினார். பின்னர், ராமர் தன்னை அழைத்ததாக கூறி அவர் விழாவில் பங்கேற்பதாக கூறினார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்தியில் 51 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. 51 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பார்க்கிங் வசதிகள் மூலமாக 22 ஆயிரத்து 825 வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடைபெற உள்ள காரணத்தாலே எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், கோயில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெறாத காரணத்தால் நாட்டின் பல மடங்களின் சங்கராச்சாரியர்கள் இந்த விழாவை புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...