புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளியின் 52 வது ஆண்டு நிறைவும் வருடாந்த கலை விழாவும்!

Date:

புத்தளம் நகரில் தமிழ் மொழி மூலம் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட ஐ.எப்.எம். முன்பள்ளியின் 52 வது ஆண்டு நிறைவோடு கூடிய, அதன் வருடாந்த கலை விழா நிகழ்வுகள் இம்மாதம் 31ம் திகதி புதன்கிழமை மாலை 03 மணிக்கு புத்தளம் நகர மண்டபத்தில் அதன் பொறுப்பாசிரியை திருமதி எம்.எஸ்.பௌசுல் ரூஸி சனூன் தலைமையில்  இடம்பெறவுள்ளது.

புத்தளம் நகரில் தமிழ் மொழி மூல முன்பள்ளிகள் எதுவுமே இல்லாத ஒரு கால கட்டத்தில் 04.02.1972 ம் ஆண்டு இந்த ஐ.எப்.எம். முன்பள்ளி புத்தளத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் 21 மழலை சிறார்கள் தமது கன்னி திறமைகளை அரங்கத்தில் வெளிக்கொணர உள்ளார்கள்.

“நாம் இல்லையேல் நாளை என்பதும் இல்லை” என்பது இந்த வைபவத்தின் தொனிப்பொருளாகும்.

நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைத்து பிள்ளைகளுக்கும் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர்கள், நகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள், நகர சபை செயலாளர், நகர சபை அதிகாரிகள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள், சமய தலைவர்கள், புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஏனைய முன்பள்ளிகளின் ஆசிரியைகள், ஐ.எப்.எம்.பழைய மாணவர் எனும் மகுடம் சூடியுள்ள சமூகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த ஐ.எப்.எம். முன்பள்ளியானது புத்தளம் நகரில் பல உயர் பதவிகளை வகிக்கின்ற பலரை உருவாக்கிய பெருமையோடு இன்றும் சேவையாற்றி கொண்டிருப்பதானது இதன் வரலாற்று சாதனையை பறை சாட்டுகிறது.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பித்து மழலை செல்வங்களுடைய திறமைகளுக்கு உற்சாகமளிக்குமாறு முன்பள்ளி பொறுப்பாசிரியை எம்.எஸ். பௌசுல் ரூஸி சனூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...