விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதி சடங்கை எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புத்தளம் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் இறுதி சடங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் நடந்த வாகன விபத்தில் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆகியோர் உயிரிழந்தனர்.
ராஜாங்க அமைச்சர் பயணித்த ஆடம்பர ஜீப் முன்னால் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் வண்டியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தர் உயிரிழந்ததுடன் ஜீப் வண்டியின் சாரதி ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு 48 வயது என்பது குறிப்பிடத்தக்கது.