சனத் நிஷாந்தவின் மரணத்தை பாற்சோறு சமைத்து கொண்டாடிய மக்கள்: உண்மை தகவல் என்ன?

Date:

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த  விபத்தில் மரணமடைந்ததையடுத்து, சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சனத் நிஷாந்தவின் மறைவால் மகிழ்ச்சியடைந்த மக்கள் நெடுஞ்சாலையில் பால்சோறு சமைத்து கொண்டாடியதாக சமூக ஊடகங்களில் புகைப்படமொன்றும் பகிரப்பட்டு வருகின்றது.

சனத் நிஷாந்தவின் மரணத்தினால் பொரளை மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பால் சோறு சமைத்து மகிழ்ச்சியை கொண்டாடுவதாகவும் தெரிவித்து, “பொரளையின் தற்போதைய நிலைமை” என குறிப்பிடப்பட்ட இந்த புகைப்படம் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

குறித்த பதிவிற்கு சமூக வலைதளங்களில் பலரும் தமது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், குறித்த பதிவின் உண்மைத் தன்மையை Fact Seeker ஆராய்ந்துள்ளது. இதன்படி, குறித்த பதிவு தவறாக பகிரப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் 2022 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பதை Fact Seeker உறுதிசெய்துள்ளது. 2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக மகிந்த இராஜபக்ஷ அறிவித்ததையடுத்து, பஞ்சிகாவத்தை பிரதான வீதியில் மக்கள் பால்சோறு சமைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படமே இதுவாகுமென தெரிவித்துள்ளது.

எனவே, சனத் நிஷாந்தவின் மரணத்தை மக்கள் கொண்டாடுவதாக பகிரப்படும் குறித்த புகைப்படம் போலியானது என்பதை Fact Seeker உறுதிப்படுத்துகிறது.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...