கண்டி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து இன்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை மட்டுப்படுத்தப்படும்!

Date:

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து இன்று (27) இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிட்டம்புவ ஸ்ரீ விஜயராம விகாரையின் மஹா பெரஹெராவினை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி இன்று (27) இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை ஊர்வலம் நடைபெறவுள்ளது.

ஊர்வலமானது நிட்டம்புவ மல்வத்தை ஸ்ரீ போதி விகாரையில் இருந்து கொழும்பு – கண்டிவ பிரதான வீதியில் நிட்டம்புவ சந்தி வரை சென்று வலப்புறம் திரும்பி அத்தனகல்ல வீதியில் பயணித்து நிட்டம்புவ ஸ்ரீ விஜயராம விகாரையை வந்தடையும்.

ஊர்வலம் ஆரம்பமானது முதல் நிட்டம்புவ சந்தி வரையான காலப்பகுதியில் கொழும்பு பிரதான வீதி மல்வத்தை சந்தியில் இருந்து நிட்டம்புவ சந்தி வரை கண்டி செல்லும் பாதையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் அதேவேளை கொழும்பு செல்லும் பாதை வழமை போன்று போக்குவரத்துக்காக திறந்திருக்கும்.

போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் கொழும்பில் இருந்து நிட்டம்புவ நகருக்கு கண்டி நோக்கி பயணிக்க உத்தேசித்துள்ள சாரதிகள் மற்றும் பொதுமக்கள் பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மாற்று வழி –

*கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கல்கெடிஹேன சந்தியில் இடதுபுறம் திரும்பி வெயாங்கொடை நகருக்கு சென்று, வலதுபுறம் திரும்பி வெயாங்கொடை நிட்டம்புவ வீதியில் நிட்டம்புவ சந்தியை அடைந்து, இடதுபுறம் திரும்பி கண்டி நோக்கி செல்லலாம்.

*மீரிகம-குருணாகல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கலகெடிஹேன சந்தியிலிருந்து இடதுபுறம் திரும்பி வெயாங்கொடை நகரத்திற்குச் சென்று வலப்புறம் திரும்பி வெயாங்கொடை நிட்டம்புவ வீதியில் 100 மீற்றர் சென்று இடதுபுறம் கொத்தலா வீதியில் மல்லஹாவ சந்தி வரை சென்று பஸ்யால மீரிகம வீதியில் இடதுபுறம் திரும்பி மீரிகம திசை நோக்கி செல்லாம்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...