ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் போராட்டம்: சஜித் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

Date:

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் பொது மையவாடி தொடக்கம் பிரதீபா மாவத்தை, சத்தர்ம மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை, ஜும்மா சந்தி ஊடாக சங்கராஜ மாவத்தை வரையான பகுதிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட தடை விதித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு இலக்கம் 04 நீதவான் எல்.மஞ்சுள இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோருக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று (30) எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளது.

மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு ஹைட் பார்க் மைதானம் மற்றும் பஞ்சிகாவத்தையில் இன்று (30) பிற்பகல் 1.30 க்கு எதிர்ப்பு பேரணிகள் ஆரம்பமாகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...