பலஸ்தீன மக்களுடனான இலங்கையின் ஆதரவையும் ஒற்றுமையையும் அடையாளப்படுத்தும் வகையில் மனிதாபிமான உதவியின் அடையாளமாக காசா மக்களுக்கு சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்குவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
அதற்கமைய நேற்றைய தினம் கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன முன்னிலையில் பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரியவிடமிருந்து இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் சைட் அவர்களினால் இந்த நன்கொடை கையளித்தார்.
இந்த நிகழ்வின் போது இலங்கையின் வெளிவிவகார செயலாளர் மற்றும் அரபு நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டனர்..