விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு வீட்டில் இருந்து உணவு!

Date:

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு வீட்டில் இருந்து உணவு எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்ததாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு கோரிக்கை விடுக்கவில்லை எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இமியூனோகுளோபியூலின் மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த வெள்ளிக்கிழமை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...