பாடசாலைக்கு கெஹலியவின் பெயர்: உடனடியாக நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

Date:

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் குண்டசாலை பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பெயரை உடனடியாக நீக்க வேண்டும். கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் உயிருடன் உள்ள ஒருவரின் பெயரை பாடசாலைக்கு பெயரிட முடியாது.

ஆனால் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமூகத்திற்கு தவறான ஒரு முன்னுதாரணம். எனவே குண்டசாலை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை என பெயரிட்டுள்ளார்.

அதனை உடனடியாக நீக்குங்கள். குறிப்பாக உயிருடன் இருக்கும் ஒருவரின் பெயரை பாடசாலைகளுக்கு வைப்பதற்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...