புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விழுக்கை, வத்தல்கண்டல் பிரதேசத்தில் உள்ள பல்லின சமூகத்தைச் சேர்ந்த சிறார்களுக்கு கடந்த 8 ஆம் திகதி பாடசாலைப் பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.
பஹன மீடியா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெயக் அப்துல் முஜீப் சாலிஹ் அவர்களின் அனுசரணையுடன் கொழும்பைச் சேர்ந்த ஃபசல் ஆப்தீன் அவர்களால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை யோஹான் ஜெயராஜ், புத்தளம் சர்வமதக் குழுவின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எம். ருமைஸ், முன்பள்ளி ஆசிரியர்கள், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.