உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவினை நிறுவ ஆலோசனை!

Date:

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவதற்கான உத்தேச சட்டம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினால் (ISTRM) ஏற்பாடு செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடனான கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மற்றும் சட்டம் தொடர்பான பேராசிரியை சாவித்ரி குணசேகர ஆகியோரின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப் பிரதானி கலாநிதி சி.வை.தங்கராஜாவின் உதவியுடன் அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவம்சவினால் நெறிப்படுத்தப்பட்டது.

இதில் அரச அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டம் மற்றும் நிலைமாறுகால நீதித்துறையில் உள்ள அறிஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில் பெரும் பங்காற்றக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் (CTUR) வரைவின் பல்வேறு அம்சங்களைப் பற்றி கலந்துரையாடுவதும் நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஆராய்வதும் இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக இருந்தது.

இதன்போது தேசிய பாதுகாப்புத் தொடர்பான முக்கியமான தகவல்களைக் கையாளுதல், முறையான பதிவு முகாமைத்துவத்திற்கான தேசிய சுவடிகள் திணைக்களத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படல் மற்றும் நிலைமாறுகால நீதிச் செயல்பாட்டில் புலம்பெயர் தமிழர்களின் ஈடுபாடு போன்ற பிரச்சினைகள் குறித்தும் பங்கேற்பாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...