2024ஆம் ஆண்டுக்கான புதிய ஹஜ் குழுவின் தலைவராக இப்ராஹிம் சாஹிப் அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்த சாசன மற்றும் சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் அவரது அமைச்சில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஹஜ் குழுவின் உறுப்பினர்களாக முஸ்லிம் சமய விவகார பணிப்பாளர் இசட். ஏ. எம் பைசல், மில்ஃபர் கஃபூர், இஃபாஸ் நபுஹான், முஹம்மது ஹனீபா இஷாக் மற்றும் நிஃப்ராஸ் நசீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட அன்சார், இலங்கைக்கான சவூதி அரேபியா, ஓமான் மலேசியா மற்றும் எகிப்து ஆகியநாடுகளின் தூதுவராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.