இந்திய கலாசார உறவுகள் மன்றத்தின் (ICCR) கீழ் இலங்கையர்களுக்கான முழு நிதியுதவி உதவித்தொகை திட்டங்களை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், இலங்கையர்கள் இந்தியாவில் உள்ள 120+ முன்னணி பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் பல்வேறு பாடங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் PHD (ஆராய்ச்சி) ஆகியவற்றை தொடர முடியும்.