காலநிலை மாற்ற நடவடிக்கை திட்டத்தை கண்டி மாவட்டத்துக்கு விஸ்தரித்தது MFCD!

Date:

காடழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியாக, MFCD, ஹரித லங்கா அமைப்புடன் கைகோர்த்து, பெப்ரவரி 8 ஆம் திகதி கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள தெல்தோட்டவில் குறிப்பாக ஹந்தானாவின் குடியேற்றப் பகுதிகளில் மரம் நடும் திட்டத்தை முன்னெடுத்தது.

‘கித்துல்முல்லை குடியிருப்பாளர்களிடையேயான இந்த கூட்டு முயற்சியானது, காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் எனும் இரட்டைச் சவாலை எதிர்கொள்வதன் மூலம், பிரதேசத்தில் பசுமை மற்றும் பல்லுயிரியலை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்ளூர்வாசிகளின் செயல் பங்கேற்பினைப் பெற்று, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் நிலையான வாழ்க்கை நடைமுறைகளுக்கான உணர்வைத் தூண்டுவதற்கும் இந்தத் திட்டம் முயல்கிறது.

MFCD இன் தலைவர் ஹனான் ஹுசைனின் கருத்துப்படி, ஹந்தான மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பசுமையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய ஒரு படியாக இந்த முயற்சியை நிறுவனம் கருதுகிறது.


இந்நிகழ்வில் கண்டி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு.சம்பத், விகாராதிபதி பூஜ்ய மஹாவில சுமனசிறி தேரர், திட்டமிடல் பணிப்பாளர் திரு.ரஞ்சித் ஹேரத், நிருவாக கிராம அலுவலர் திரு. யட்டவர, நிர்வாக அதிகாரி திரு.ஏ.பி.கே. ஏகநாயக்க, கிராம உத்தியோகத்தர் திருமதி சஞ்சீவனி, அபிவிருத்தி உத்தியோகத்தர் மாயா ஹேரத், காணி நிர்வாக உத்தியோகத்தர் திரு.சமந்த, அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் ட்டீ.ப்பீ.ஜலீல், சுற்றாடல் உத்தியோகத்தர் திரு.ஹசந்த, செயற்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அவந்தி பிரசாஞ்சலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்தோடு ஹரித லங்கா அமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.தினேஷ் அவர்களும் MFCD இன் தலைவர் ஹனான் ஹுசைன், நிதித் தலைவர் அஷ்பக், திட்ட முகாமையாளர் மர்ஷாத் மன்சூர், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆஷிப் ரவுப், IT & மீடியா அலுவலகம் ஃபாரிக் மாஹிர் உட்பட MFCD இலங்கையின் தன்னார்வத் தொண்டர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...