இந்தோனேசிய ஜனாதிபதித் தேர்தல்: முக்கிய மூவரிடையே போட்டி; வெற்றியை நோக்கி பிரபோவோ

Date:

உலகின் 3ஆவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் இன்று (14) ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சரான பிரபோலோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்களான அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். எந்த வேட்பாளர்களுக்கும் 50 சதவீத வாக்கு கிடைக்காவிட்டால் 2ஆவது சுற்றுத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்.

கருத்து கணிப்புகளில் பாதுகாப்பு அமைச்சர் பிரபோலோ 52 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவை பெற்றவர். துணை ஜனாதிபதி பதவிக்கு ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவின் மகன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சிறைவாசம் அனுபவிக்கும் பௌத்த பிக்குகளின் காவி உடை தொடர்பில் நிக்காயக்களே தீர்மானிக்க வேண்டும்: அமைச்சர் நலிந்த

பல்வேறு குற்றச் செயல்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் தொடர்ந்து  (காவி...

2027 ஆண்டிலும் பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 கொடுப்பனவு

2027 ஆம் கல்வியாண்டிற்காக 15 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்குத் தலா 6,000...

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

அஸ்வெசும (Aswesuma) நலத்திட்ட உதவிகளுக்கான 2.04 பில்லியன் ரூபாயை, தகுதியுள்ள பயனாளிகளின்...