தலிபான்களுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் முதல் நாடு: ஆப்கானிஸ்தானுக்கு தூதுவரை அனுப்பியது சீனா

Date:

ஆப்கானிஸ்தானுக்கான புதிய  சீனத் தூதுவராக நியமிக்கப்பட்ட ஜாவோ ஷெங், தலைநகர் காபூலில் (13) தலிபான் பிரதமர் முல்லா ஹசன் அகுண்டிடம் தனது நற்சான்றிதழ்களை வழங்கினார்.

ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் 2021 இல் தலிபான் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தூதுவர் மட்டத்தில் ஒரு வெளிநாட்டு தூதுவரை நியமிக்கும் முதல் நியமனம் என்று தெரிவித்தனர்.

தலிபான்களை எந்த வெளிநாட்டு அரசாங்கமும் அதிகாரப்பூர்மாக அங்கீகரிக்கவில்லை. தலிபான் நிர்வாகத்தின் துணைசெய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி கூறுகையில்,

ஆப்கானிஸ்தானின்  பிரதமர் முகமதுஹசன் அகுண்ட், ஆப்கானிஸ்தானுக்கான புதிய சீன தூதுவர்  ஜாவோ ஜிங்கின் நற்சான்றிதழ்களை ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2021 இல் வெளிநாட்டுப்படைகள் வெளியேறியதால், தலிபான்கள் பொறுப்பேற்ற பின்னர் நியமிக்கப்பட்ட முதல் தூதுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆப்கானிஸ்தானுக்கான சீனத்தூதராக எனது பணியைத் தொடங்குவது மகிழ்ச்சி, சீன மக்கள் குடியரசின் தலைமையின் நற்பண்புகளையும் சீனத்தூதுவர்
குறிப்பிட்டார்.

‘சீனா-ஆப்கானிஸ்தான் உறவுகளை வலுப்படுத்தவும்,அரசியல், பொருளாதாரம் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் முயற்சிப்பேன்’ என்று அவர் மேலும் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் தலிபான் தலைமையை அங்கீகரித்த முதல் நாடுகளில் ரஷ்யாவும் சீனாவும் இருந்தன. மோதல்களால் பாதிக்கப்பட்ட நாட்டுடனான உறவுகளை ஆழப்படுத்த ஆப்கானிஸ்தான்  மீண்டும் அழைப்பு விடுத்துள்ளன.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...