பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீதான நீதிமன்ற உத்தரவு!

Date:

யுக்திய நடவடிக்கை கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை அவற்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வாகனங்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளுக்கு அவகாசம் வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்து கடுவெல நீதவான் திருமதி சனிமா விஜேபண்டார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தச் சொத்தை கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்திடம் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான உத்தரவுகளைப் பெறவில்லை என பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றில் கடும் ஆட்சேபனையை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வெலிவிட்ட சுத்தா’ என்பவரின் சகோதரிக்கு சொந்தமான 5 சொகுசு பஸ்கள், நவீன கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடுவெல பொலிஸார் கைப்பற்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...