அரசு பாடசாலைகளில் ஆசிரியர்களை விட ஆசிரியைகள் மூன்று மடங்கு அதிகம்!

Date:

நாடு முழுவதும் உள்ள அரசுப் பாடசாலைகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டிலுள்ள அரசு பாடசாலைகளில் ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 236,738 என்றும் அவர்களில் 56,817 பேர் ஆண் ஆசிரியர்கள் மற்றும் 179,921 பேர் பெண் ஆசிரியர்கள் என்றும் பெண் ஆசிரியர்களின் தொகை 76 சதவீதமாக உள்ளது என்றும் குருநாகல் மாவட்ட சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம். பாலசூரிய தெரிவித்துள்ளார் ..

396 தேசிய பாடசாலைகளும் 9,730 மாகாண பாடசாலைகளும் உள்ளடங்கலாக தற்போது 10,126 பாடசாலைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும் இவற்றில் சுமார் 1,473 பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர் என்றும் குறிப்பிட்ட அவர் சுமார் 34 பாடசாலைகளில் 4,000 மாணவர்களுக்கும் அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.

கல்வி அமைச்சு இந்த ஆண்டுக்கான அரசாங்கப் பாடசாலைகளின் தரம் ஒன்றிற்கு புதிய மாணவர்களை பெப்ரவரி 22ஆம் திகதி சேர்த்துக்கொள்ளவுள்ளது. அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றில் சுமார் 350,000 மாணவர்கள் இவ்வருடம் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என பாலசூரிய மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...