நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை

Date:

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையால், வெளியில் செல்வதை போதிய அளவு தவிர்ப்பதுடன்,, அடிக்கடி நிறைய தண்ணீர்  அருந்துமாறு மருத்துவ நிபுணர்கள் கடுமையாக அறிவுறுத்துகின்றனர்.

செயற்கை பானங்களைத் தவிர்த்து, நீர், தேங்காய் போன்ற இயற்கை பானங்களை உட்கொள்வதன் மூலம் நீரேற்றத்திற்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் நல்லது என சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் தீவிர வெப்பநிலை காரணமாக நீரிழப்பு அபாயத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“எனவே, ஆபத்தில் உள்ளவர்கள் சூரிய ஒளியின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் நீரிழப்பைத் தவிர்க்க நீரேற்றமாக இருக்க வேண்டும். குறைந்தது 2.5 லீற்றர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வெளிப்புற நடவடிக்கைகளில் இருந்து, குறிப்பாக அத்தியாவசியமற்ற வெளிப்புற செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறு பாடசாலை மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...