விவசாய தொழில்நுட்பப் பரிமாற்றம்: இலங்கை வியட்நாம் இடையே ஒப்பந்தம் கைச்சாத்து!

Date:

இலங்கை வியட்நாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.

கொழும்பில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது மாநாடு இடம்பெற்று வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

விவசாய தொழில்நுட்பப் பரிமாற்றம் தொடர்பிலேயே இரு நாடுகளுக்கிடையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வியட்நாம் நாட்டின் விவசாயத்துறை உட்பட கிராம அபிவிருத்தி அமைச்சர் மின்மொஹான் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

குறித்த ஒப்பந்தத்தில் பூச்சிக்கொல்லி பயன்பாடு, விவசாய தொழில்நுட்பம் தொடர்பிலான ஆய்வுகள் மற்றும் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குதல் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...