தேசிய அடையாள அட்டைகளில் புதிய மாற்றம்….?

Date:

இலங்கையில் புதிதாக அறிமுகப்பட்டுள்ள வரிசெலுத்துவோர் அடையாள எண்ணை (டின்) அடிப்படையாகக் கொண்டு தேசிய அடையாள அட்டைகளை எதிர்காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வரிப் பதிவில் டின் இலக்கம் வழங்கும் தொடர்பான யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு அதே இலக்கத்தையே பிரதான இலக்கமாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்து அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான பிரேரணை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக 6 நிறுவனங்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன. இதுவரை 4 நிறுவனங்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளன.

மேலும் இரண்டு நிறுவனங்களின் பரிந்துரைகள் பெறப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...