மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு விரைவில்…!

Date:

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 28 ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது.

மேலும் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை கடந்த 22 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த திருத்தத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்படித்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...