பலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி அமெரிக்க படை வீரர் தீக்குளிப்பு!

Date:

பலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு  தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000 பேரின் உயிரை எடுத்திருக்கிறது.

போரை தடுக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், இஸ்ரேல் அதை மதிக்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதெல்லாம், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்ய வைத்திருந்தது.

இந்நிலையில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், சுதந்திரமான பலஸ்தீனத்தை வலியுறுத்தியும் அமெரிக்காவின் விமானப்படை வீரர் ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி பகுதியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே இந்த தீக்குளிப்பு சம்பவம் நடந்திருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று, வழக்கம்போல அவர் பணிக்கு வந்திருக்கிறார். அதன் பின்னர் தூதரகத்தின் வாசலுக்கு வந்த அவர்,

“இனிமேலும் நான் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன். நான் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன். பலஸ்தீனத்தை விடுவிக்கவும்” என்று கூறி தனது உடலில் தீயை வைத்துக்கொண்டார்.

தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில், “பலஸ்தீனத்தை விடுவிக்கவும், பலஸ்தீனத்தை விடுவிக்கவும்” என்று தொடர்ந்து முழக்கமிட்டிருக்கிறார். இந்த சம்பவத்தின்போது உடன் பணியாற்றி சில அதிகாரிகள், தீயை அணைத்துள்ளனர்.

இது குறித்து புலனாய்வு விசாரணையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, தற்கொலைக்கு முயன்ற நபர் அமெரிக்கா விமானப்படையில் பணியாற்றி வரும் வீரர் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இருப்பினும், அவரது பெயர் மற்றும் அடையாளங்கள் இன்னும் வெளியாகவில்லை. அமெரிக்க செய்தி ஊடகங்களும், அவர் விமானப்படையை சேர்ந்த வீரர் என்பதை உறுதி செய்துள்ளன.

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...