இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சிரேஷ்ட அமெரிக்க ராஜதந்திரியான எலிசபெத் கெத்ரின் ஹோஸ்ட், பாகிஸ்தானுக்கு பொறுப்பான தலைமை பிரதி செயலாளராக பதவி வகித்து வருகின்ற நிலையிலேயே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.