‘காசா இனப்படுகொலையை நிறுத்துங்கள்’: தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் சிகிச்சை பலனின்றி பலி!

Date:

பலஸ்தீனத்தை விடுவிக்கக்கோரி அமெரிக்கா வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

பலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர், கடந்த அக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல் நடத்தினர். அதில் ஆயிரத்து 400 பேர் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காசாவில் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 25ஆம் திகதிஅமெரிக்காவின் வாஷிங்டனில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே அமெரிக்காவின் விமானப்படை வீரரான 25 வயது இளைஞர் ஆரோன் புஷ்னெல் தீக்குளித்தார்.

ராணுவ சீருடை அணிந்தவாறு இனப்படுகொலைக்கு இனியும் ஆதரவாக இருக்க மாட்டேன் எனக்கூறி தனக்குத் தானே அவர் தீவைத்துக் கொண்டார்.

தீப்பற்றி எரிந்தபோதும், பலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும் என பலமுறை கூறிய அவர், சரிந்து விழுந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  கொடூர நிகழ்வு ட்விட்ச் என்ற சமூக ஊடகத்தில் நேரலையாகி, அமெரிக்காவுக்கு அப்பாலும் மக்களை பதற வைத்தது. உடனடியாக அந்த வீடியோவை ட்விட்ச் நிர்வாகம் நீக்கியது. ஆனபோதும், அமெரிக்கா ஆசிர்வாதத்தில் நடைபெறும் ஒரு போர் நடவடிக்கைக்கு எதிரான அமெரிக்கர்களின் குரலை வெளியுலகுக்கு எதிரொலிக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...