கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல ஆரம்ப பிரிவு பாடசாலையின் 2023ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் திருமதி சி.எம்.எப். சிமாரா அவர்களின் தலைமையில் எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளதுடன் விசேட அதிதியாக கண்டி கல்வி வலயப் பணிப்பாளர் திரு. டி.சி.ஜே. அந்தரகே அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
2023ம் ஆண்டு பல துறைகளிலும் சாதனைப் படைத்த மாணவர்கள் இந்த நிகழ்வின் போது பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளனர்.