காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக சமாதான அனுசரணையாளர்கள் இன்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலஸ்தீனத்தில் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி இருக்கும் பொதுமக்களுக்கு விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை வழங்க வெளிநாட்டு அரசாங்கங்கள் தீர்மானித்துள்ளதை தொடர்ந்து, காஸாவில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான வழிவகைகள் குறித்து சமாதான அனுசரணையாளர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் இஸ்ரேலிய, ஹமாஸ் தரப்பினரும் இன்று கெய்ரோ சென்றடைவர்கள் என எகிப்து பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.