Google map பயன்படுத்தி அலரி மாளிகைக்குள் நுழைந்த இருவர் கைது !

Date:

கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சொப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஒருவரும், மற்றுமொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரவு விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு கூகுள் மேப்பின் உதவியோடு தாம் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது, வழிதவறி அலரி மாளிகை மதிற்சுவர் அருகே சென்றுள்ளனர்.

பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் மதிற்சுவர் ஏறி அலரி மாளிகைக்குள் குதிக்க முற்பட்டுள்ளனர்.

அதன்போது, ​​பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவின் சுற்றுலா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூலம்: லங்காதீப

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...