இலங்கையில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றில் உரை

Date:

1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக 2023ஆம் ஆண்டில் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 363 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்று 308 ரூபாயாக வீழ்ச்சியடைந்து ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கை  பொருளாதாரத்தை முன்னேற்றுவது மற்றும் சர்வதேச கடன் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி உரையாற்றினார்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித் திட்டத்தை உயர்த்துவது போன்ற விடயங்கள் பற்றி விபரிக்கிறார்.

விவசாயத்துறை முன்னேற்றம் அதற்கான உதவித் திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாகவும் மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களுக்குரிய வற் வரிகள் போன்றவற்றை குறைப்பது பற்றியும் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில்  குறிப்பிட்டார். .

Popular

More like this
Related

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...