உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் நிதி அமைச்சின் புதிய தீர்மானம்!

Date:

மாற்று திறன்களைக் கொண்டவர்கள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உதவி பெறும் மாற்று திறன்களைக் கொண்ட 410,000 பேருக்கு தலா 7,500 ரூபா மாதாந்த கொடுப்பனவும், சிறுநீரக உதவி பெறும் 50,000 பேருக்கு தலா 7,500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.

இது தவிர முதியோர் உதவி பெறும் 820,000 பேருக்கு தலா 3,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இந்த கொடுப்பனவுகள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை செலுத்தப்பட வேண்டும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...