சம்பள உயர்வு மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர்.
அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாளர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்
தங்களின் சம்பள உயர்வை தொடர்ந்து தாமதப்படுத்துவதையும், பணிக்கு இடையூறு செய்யும் சுகாதாரத்துறை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காததையும் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.