அஸ்வெசும நலன்புரித் திட்டம் குறித்த அறிவிப்பு!

Date:

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி,ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இந்த மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதற்கமைய சுமார் 2 மில்லியன் பயனாளிகள் அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இரண்டாவது கட்டத்தின் கீழ் அந்த எண்ணிக்கையை 2.4 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 205 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி நியமனம்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம்....

கஞ்சிப்பானி இம்ரானின் சகாக்கள் இன்று நாட்டிற்கு

மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று...

சாகர காரியவசம் குற்ற விசாரணைப் பிரிவால் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம்...

கடந்த 9 நாட்களில் 4292 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய...