இலங்கை உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள் பூர்த்தி!

Date:

இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

1996 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூர் கடாபி மைதானத்தில் இலங்கை அணி குறித்த மாபெரும் வெற்றியை பதிவுசெய்தது.

குறித்த இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் 242 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆடிய அரவிந்த டி சில்வாவின் அபாரமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 46.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது.

அத்துடன் இலங்கை அணி முதன் முறையாக ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...