இன்றைய கால கட்டத்தில் சக்தி வாய்ந்த ஊடகம் என்றால் அது சினிமாதான். உலக உருண்டையின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு தரப்பட்டவர்களாலும் முன்னெடுத்து செல்லபடுகின்ற இந்த பிரபலம் பெற்ற ஊடகத்தில் சினிமாவும் தனக்காக ஒரு உன்னத நிலையை பெற்று விளங்குகின்றது .
இவ்வாறான பெருமை கொண்ட சினிமா தமிழ் மக்கள் ஆகிய எம் சமூத்திலும் ஒன்றோடொன்று பின்னிபினைந்துவிட்டது. அது வளர்ந்து வரும் நாகரீகமாய் அமைந்து விட்டது என்றும் கூறலாம்.
அந்தவகையில் புத்தளம் கலைஞர்களின் முயற்சியில் நேற்று ‘இறுதி ரமழான்’ என்ற குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தமிழ்பேசும் மக்களும் உணர்ச்சி வசப்பட வைக்கும் படமாக அமைந்திருக்கும்.
இதுபற்றி படக்குழுவினர் கூறுகையில்,
அதுமட்டுமில்லாது இந்த புனித மாதத்தில் கடந்த சில நாட்கள் எதிர்பார்ப்பில் ஆழ்த்திய ‘இறுதி ரமழான்’ குறும்படத்தை உங்கள் கண்களுக்கு வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
ஒவ்வொரு உள்ளத்தையும் ஓரங்குலமேனும் அசைக்கக்கூடிய ஒரு படைப்பை இந்த ரமழானில் இயக்க கிடைத்தமை அல்லாஹ்வின் அருள் எனக் கருதுகிறோம்…
iMedia Networks இன் உருவாக்கத்தில் HAHR இன் தயாரிப்பில் KRA Hazam | Rinsad Ahmed | Salman Faris | Hisham Hussain | Sabarullah Khan | Muhamed Nafees | Sharoofie Saheed | R.M. Askar | RJ Ahmed | Srm Mufas | Nafly Hussain | Imadh ahmed | PM Abdullah | PM Mohamed | RA Musab | PM Ayman ibrahim| Shimar மற்றும் பலரது நடிப்பில் Abdullah Murad இன் Cinematography & Editing இல், Muwaffaq Murad இன் இணை நெறியாள்கையில், SACP Marikkar (புத்தளம் மரிக்கார்) இன் இயக்கத்தில் இந்த குறுந்திரைப்படம் வெளியிடப்படுகிறது.
குடும்பமாக அமர்ந்து, இந்த குறும்படத்தை நீங்கள் ரசிக்கவேண்டும் என்பதுடன்
அந்த அமர்வின் அடையாளங்களை எம்முடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
சமூக மாற்றத்தின் சப்தமாய் இந்த ஆக்கத்தை அனைவரும் காண ஆவண செய்யவேண்டும் என்பதே கலைஞர்களின் எதிர்பார்ப்புகளாகும்….!