சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துடன், எதிர்க்கட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.