இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பால் தேநீரின் விலையும் 5 முதல் 10 ரூபாவால் குறைக்கப்படும்.
இந்த விடயத்தை அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 150 ரூபாவினாலும் 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.