ரணிலுக்கு ஆதரவாக புதிய கூட்டணி அமைக்கப்போகும் மைத்திரி?

Date:

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் இந்த வார இறுதியில் கொழும்புக்கு அழைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும் மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது கட்டாயம் என அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளதாகவும், அதன் செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, மைத்திரியின் அரசியல் சந்திப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இந்த புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்: ஒருவன்

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...