வெள்ளவத்தை பகுதியில் உள்ள பிரபல ஆடையகம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் 4 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் மின்கசிவு என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
11 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு படைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது பிரதேசவாசிகள், பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரியவந்துள்ளது