பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட சில பழைய ரோமானிய ரயில் பெட்டிகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா ரயில் பெட்டிகளாக புனரமைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த ரயில் பெட்டிகள் பார்வையாளர் கூடங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதனூடாக, ரயில் பயணத்தின்போது, இயற்கையை கண்டுகளிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புனரமைப்புப் பணிகளுக்காக ரயில்வே திணைக்களம் 55 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது.
இரத்மலானையிலுள்ள பிரதான ரயில் இயந்திர தொழிற்சாலையின் ஊடாக, பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட இந்த ரோமானிய ரயில் பெட்டிகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி, பதுளைக்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த ரயில் பெட்டிகளை சேவையில் இணைக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.