காசா மக்களுக்கு அத்தியவசியப் பொருட்களை வழங்க வேண்டும்:சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

Date:

காசாவில் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை காசாவில் இனப்படுகொலை இடம்பெறுவதாக தென்னாபிரிக்கா குற்றம் சுமத்தியுள்ள நிலையில் சர்வதேச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகப்பெரிய அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் மோதல் பகுதிகளில் வறுமை அதிகரித்து வருவதாகவும், இதனால் சிறுவர்கள், வயோதிபர்கள் பெண்கள் ஆகியோர் வெகுவாக பதிப்படைந்துள்ளதாகவும் நீதிபதிகள் விபரித்துள்ளனர்.

இந்தநிலையில் மனித அவலத்தை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக போர் நிறுத்தம் அவசியம் என ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையிலான ஆயுத மோதலானது காசாவின் அல் ஷிபா வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் இடம்பெறுவதாக சர்வதேச நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

 

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...