இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் பாராளுமன்ற கட்டிடத்தின் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இஸ்ரேல்-காசா போரில் போர் நிறுத்தம், ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் உடனடி தேர்தல் நடத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த வருடம் அக்டோபர் 7ஆம் திகதி காஸா பகுதியில் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக நடத்தப்படும் மிகப்பெரிய எதிர்ப்பு இதுவாகும்.
ஹமாஸின் தாக்குதல்களின் போது இஸ்ரேலில் பாதுகாப்பு அமைப்பில் இருந்த பலவீனம் குறித்து பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காசா பகுதியில் நடத்தப்பட்ட எதிர்த் தாக்குதலின் போது இஸ்ரேல் பிரதமர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.