இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Date:

இன்றையதினம் (02) நாட்டின் மேல், தென், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே, மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல், மத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவுனம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...