ஞானசார தேரரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

Date:

கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிப்பதற்காக கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள 4 வருட சிறைத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதிவாதி ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் இந்த பிணை கோரிக்கையை  நீதிமன்றில்  சமர்ப்பித்திருந்த​னர்

இன்னிலையில் ஞானசார தேரருக்கு தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...